Course Content for Tamil 3

HSCP 3 முதல் பருவத்தின் நோக்கம்

புத்தகங்கள்:

  • தமிழ் நிலை 3 முதல் பருவம் உகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்).
  • GGS கட்டுரை பயிற்சிகள் - வகுப்பு 4.

கேட்டல்:

  • புதிய செய்திகளைக் கேட்க ஆர்வம் கொள்ளுதல்.
  • சிறுசிறு உரைப் பகுதிகளைக் கேட்டுப் பொருளுணர்தல்.
  • அறக்கருத்துகள் நிறைந்த பாடல்களைக் கேட்டுணர்தல்.
  • வாழ்வியல் திறன் வளர்க்கும் சிறுசிறு கதைப் பகுதிகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்.
  • ஒலி வேறுபாடுடைய சொற்களைக் கேட்டுப் பொருள் அறிதல்.(ண,ந,ன/ர,ற/ ல,ழ,ள)
  • இலக்கணக் கருத்துகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல் (அறுவகைப் பெயர்ச்சொற்கள், பெயரெச்சம், வினையெச்சம், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள்)

பேசுதல்:

  • உரைப்பகுதிவழித் தாம் புரிந்துகொண்ட கருத்துகளை வெளிப்படுத்துதல்.
  • நற்பண்பை வளர்க்கும் பாடலின் கருத்தைப் புரிந்துகொண்டு, தம் சொந்தநடையில் கூறுதல்.
  • இலக்கணக் கருத்துகளைப் படங்கள், உரையாடல்கள் வாயிலாக எளிமையாக அறிந்துகொண்டு பேசுதல்.
  • படக்காட்சிகள், சூழல்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப உரையாடல் அமைத்துப் பேசுதல்.
  • தாம் கேட்ட புதிய சொற்கள், தொடர்கள், உரைப்பகுதிகள் முதலியவற்றின் பொருளுணர வினாக்கள் எழுப்பி விடை காணல்.
  • எளிய இலக்கணக் கூறுகளைப் புரிந்துகொண்டு பேசுதல். (அறுவகைப் பெயர்ச்சொற்கள், பெயரெச்சம், வினையெச்சம், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள்) ஒலிவேறுபாடு உடைய சொற்களின் பொருள் அறிந்து, சரியாக ஒலித்துப் பழகுதல்.
  • மொழியின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு பொருத்தமாகப் பேசுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள், உவமைத் தொடர்கள் போன்றவை)
  • நான்கு, ஆறு சொல் கொண்டு தொடர் உருவாக்கிப் பேசுதல்.
  • பிறரோடு தயக்கமின்றித் தமிழில் பேசும் திறன் பெறுதல்.
  • படக்கதைகளைப் புரிந்து கொண்டு கோர்வையாகப் பேசுதல்.
  • திட்டப்பணியைச் செய்வார்கள்.
  • கேட்டல் கருத்தறிதல் மூலம் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.
  • விளையாட்டின் மூலம் தமிழ் மொழியினைக் கற்றுக் கொள்வார்கள்.
  • நாபிறழ் பயிற்சியைச் சொல்லப் பழகுவார்கள்.

படித்தல்:

  • சிறுசிறு உரைப்பகுதிகள், பாடல்கள், கதை ஆகியவற்றைப் பொருளுணர்ந்து படித்தல்.
  • படச்சூழல்களைப் புரிந்துகொள்ளுதல்.
  • புதிய சொற்களின் பொருளுணர்ந்து தம் முன்னறிவோடு இணைத்தல்.
  • அறக்கருத்துகள் உணர்த்தும் பாடல்களைப் படித்துப் பொருளுணர்தல்.
  • இலக்கணக் கருத்துகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுதல். (அறுவகைப் பெயர்ச்சொற்கள், பெயரெச்சம், வினையெச்சம், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள்)
  • எளிய நடைமுறை இலக்கணக் கூறுகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள், உவமைத்தொடர்கள்)
  • இரண்டு, மூன்று, நான்கு சொல்கொண்ட தொடர்களைப் படித்தல்.
  • விளம்பரம்/ அறிவிப்பு முதலானவற்றைப் படித்துக் கருத்துணர்தல், விடை கூறும் திறன் பெறுதல்.
  • கருத்து விளக்கப்படத்தின் கருத்தறிதல்.
  • பாடநூலுக்கு அப்பாற்பட்டும் தமிழ் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், கதை நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதற்கு ஆர்வம் கொள்ளுதல்.
  • திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், புறநானூறு, திருமந்திரம், நீதிநெறி விளக்கம் போன்ற பாடல்களைக் கற்றுக் கொள்வார்கள்.

எழுதுதல்:

  • எளிய எழுத்துப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல். (சொல்வதனைக் கேட்டு எழுதுதல், சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுதல்.)
  • சிறு சிறு உரைப்பகுதிகளைப் படித்துப் புரிந்துகொண்டு விடை எழுதுதல்.
  • படச்சூழல்களுக்குத் தமிழில் உரையாடல் எழுதும் திறன் பெறுதல்.
  • இலக்கணக் கருத்துகளைப் புரிந்துகொண்டு பொருத்தமாக எழுதிப் பழகுதல். (அறுவகைப் பெயர்ச்சொற்கள், பெயரெச்சம், வினையெச்சம், ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள்)
  • எளிய மொழிப் பயிற்சிகளைப் புரிந்துகொண்டு விடையளித்தல். (ஒலி வேறுபாடுடைய சொற்கள்)
  • மொழியின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு பொருத்தமாக எழுதுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள், உவமைத் தொடர்கள் போன்றவை)
  • இரண்டு, மூன்று, நான்கு சொல்கொண்டு தொடர் உருவாக்குதல்.
  • விடுகதை/ புதிர் போன்றவற்றைப் படித்து விடை எழுதுதல்.
  • உரைப்பகுதியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுதல்.
  • ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச்சொற்களை எழுதுதல்.
  • சிந்தனைக்கு விருந்து அளிக்கும் படைப்பாற்றல் வளர்செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுதல்.
  • சொற்கள், எளிய தொடர்கள், சிறு உரைப்பகுதி ஆகியவற்றை மொழிபெயர்த்து எழுதுதல்.
  • எளிய செயல்திட்டங்களை மேற்கொள்ளுதல்.
  • படங்கள், துணைச் சொற்களின் உதவியுடன், கட்டுரையை எழுதுவார்கள்.
  • கொடுக்கப்படும் தலைப்பில் கட்டுரையை எழுதுவார்கள்.
  • சிறுகதைகளை எழுதப் பழகுவார்கள்.

HSCP 3 இரண்டாம் பருவத்தின் நோக்கம்

புத்தகங்கள்:

  • தமிழ் நிலை 3 இரண்டாம் பருவம் உகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்).
  • GGS கட்டுரை பயிற்சிகள் - வகுப்பு 4.

பேசுதல்:

  • புதிய செய்திகளைக் கேட்க ஆர்வம் கொள்ளுதல்.
  • சிறுசிறு உரைப் பகுதிகளைக் கேட்டுப் பொருளுணர்தல்.
  • அறக்கருத்துகள் நிறைந்த பாடல்களைக் கேட்டுணர்தல்.
  • வாழ்வியல் திறன் வளர்க்கும் சிறுசிறு கதைப் பகுதிகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்.
  • இலக்கணக் கருத்துகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்(இடைச்சொற்கள், பெயரெச்ச வகைள், வினையெச்ச வகைகள், வழு, வழாநிலை- திணை, பால், எண், இடம், காலம், மரபு), புணர்ச்சி - இயல்பு, விகாரம்)

கேட்டல்:

  • உரைப்பகுதிவழித் தாம் புரிந்துகொண்ட கருத்துகளை வெளிப்படுத்துதல்.
  • நற்பண்பை வளர்க்கும் பாடலின் கருத்தைப் புரிந்துகொண்டு, தம் சொந்தநடையில் கூறுதல்.
  • இலக்கணக் கருத்துகளைப் படங்கள், உரையாடல்கள் வாயிலாக எளிமையாக அறிந்துகொண்டு பேசுதல்.
  • படக்காட்சிகள், சூழல்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப உரையாடல் அமைத்துப் பேசுதல்.
  • தாம் கேட்ட புதிய சொற்கள், தொடர்கள், உரைப்பகுதிகள் முதலியவற்றின் பொருளுணர வினாக்கள் எழுப்பி விடை காணல்.
  • எளிய இலக்கணக் கூறுகளைப் புரிந்துகொண்டு பேசுதல். (இடைச்சொற்கள், பெயரெச்ச வகைகள், வினையெச்ச வகைகள், வழு, வழாநிலை, திணை, பால், எண், இடம், காலம், மரபு), புணர்ச்சி - இயல்பு, விகாரம்) )
  • மொழியின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு பொருத்தமாகப் பேசுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள், சிலேடை நயங்கள், உவமைத் தொடர்கள் , கருத்துமாறாத் தொடர்கள், தொகைச்சொற்கள்போன்றவை)
  • ஐந்து, ஏழு சொல் கொண்டு தொடர் உருவாக்கிப் பேசுதல்.
  • பிறரோடு தயக்கமின்றித் தமிழில் பேசும் திறன் பெறுதல்.
  • கேட்டல் கருத்தறிதல் மூலம் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.
  • விளையாட்டின் மூலம் தமிழ் மொழியினைக் கற்றுக் கொள்வார்கள்.
  • கேட்டல் கருத்தறிதலின் மூலம் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.
  • குழுத்திட்டபணியாகக் குறும்படத்தைத் தயாரிப்பார்கள்.
  • விடுகதைக்கு விடையளிப்பார்கள்.

படித்தல்:

  • சிறுசிறு உரைப்பகுதிகள், பாடல்கள், கதைகள் ஆகியவற்றைப் பொருளுணர்ந்து படித்தல்.
  • படச்சூழல்களைப் புரிந்துகொள்ளுதல்.
  • புதிய சொற்களின் பொருளுணர்ந்து தம் முன்னறிவோடு இணைத்தல்.
  • அறக்கருத்துகள் உணர்த்தும் பாடல்களைப் படித்துப் பொருளுணர்தல்.
  • இலக்கணக் கருத்துகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுதல். (இடைச்சொற்கள், பெயரெச்ச வகைகள், வினையெச்ச வகைகள், வழு, வழாநிலை- திணை, பால், எண், இடம், காலம், மரபு), புணர்ச்சி – இயல்பு, விகாரம்)
  • எளிய நடைமுறை இலக்கணக் கூறுகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள், உவமைத்தொடர்கள், சிலேடை நயங்கள், கருத்துமாறாத் தொடர்கள், தொகைச்சொற்கள்)
  • மூன்று, நான்கு, ஐந்து சொல்கொண்ட தொடர்களைப் படித்தல்.
  • விளம்பரம்/ அறிவிப்பு முதலானவற்றைப் படித்துக் கருத்துணர்தல், விடை கூறும் திறன் பெறுதல்.
  • கருத்து விளக்கப்படத்தின் கருத்தறிதல்.
  • பாடநூலுக்கு அப்பாற்பட்டும் தமிழ் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், கதை நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதற்கு ஆர்வம் கொள்ளுதல்.
  • மூதுரை, திருக்குறள், நாலடியார், நீதிநெறி விளக்கம், மணிமேகலை போன்ற பாடல்களைக் கற்றுக் கொள்வார்கள்.

எழுதுதல்:

  • எளிய எழுத்துப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல். (சொல்வதனைக் கேட்டு எழுதுதல், சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுதல்)
  • சிறு சிறு உரைப்பகுதிகளைப் படித்துப் புரிந்துகொண்டு விடை எழுதுதல்.
  • படச்சூழல்களுக்குத் தமிழில் உரையாடல் எழுதும் திறன் பெறுதல்.
  • இலக்கணக் கருத்துகளைப் புரிந்துகொண்டு பொருத்தமாக எழுதிப் பழகுதல். (இடைச்சொற்கள், பெயரெச்ச வகைகள், வினையெச்ச வகைகள், வழு, வழாநிலை - திணை, பால், எண், இடம், காலம், மரபு), புணர்ச்சி – இயல்பு, விகாரம்)
  • எளிய மொழிப் பயிற்சிகளைப் புரிந்துகொண்டு விடையளித்தல். (ஒலி வேறுபாடுடைய சொற்கள்)
  • மொழியின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு பொருத்தமாக எழுதுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள், சிலேடை நயங்கள், உவமைத் தொடர்கள், கருத்துமாறாத் தொடர்கள், தொகைச்சொற்கள் போன்றவை)
  • மூன்று, நான்கு, ஐந்து சொல்கொண்டு தொடர் உருவாக்குதல்.
  • விடுகதை/ புதிர் போன்றவற்றைப் படித்து விடை எழுதுதல்.
  • உரைப்பகுதியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுதல்.
  • ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச்சொற்களை எழுதுதல்.
  • சிந்தனைக்கு விருந்து அளிக்கும் படைப்பாற்றல் வளர்செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுதல்.
  • சொற்கள், எளிய தொடர்கள், சிறு உரைப்பகுதி ஆகியவற்றை மொழிபெயர்த்து எழுதுதல்.
  • எளிய செயல்திட்டங்களை மேற்கொள்ளுதல். படங்கள், துணைச் சொற்களின் உதவியுடன், கட்டுரையை எழுதுவார்கள்.
  • கொடுக்கப்படும் தலைப்பில் கட்டுரையை எழுதுவார்கள்.
  • சிறுகதைகளை எழுதப் பழகுவார்கள்.