உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நாம் தற்போது நம் கல்வித் திட்டங்களையும் வழிமுறைகளையும் சுய பகுப்பாய்வு (self-analysis) செய்து, மாணவர் கற்றல் விளைவுகளை மேம்படுத்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம். இத்தகைய சுய பகுப்பாய்வு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள நமது பள்ளி மாணவர் தமிழறிவின் தரநிலைகளையும் அறிந்து தேவைக்கேற்ற மாற்றங்களை மேற்கொள்ள உதவும் என நம்புகிறோம்.