Aboutus >கலி·போர்னியா தமிழ் கழகம்

கலி·போர்னியா தமிழ் கழகம்

லோகநாதன் வெங்கடாச்சலம்

ஞாயிறுதோறும் ஆலயத்தில் மணியோசை ஒலிக்க மறந்தாலும், டீ-ஆன்ஜா கல்லூரியில் தமிழோசை ஒலிக்க தவறுவதில்லை.

நம் நாட்டில் இருக்கும் மலர்களின் மணம் இங்கு வீசவில்லையென்றாலும், நம் தமிழ் குழந்தைகளின் தமிழ் மணம், சிறந்த மலரினும் அற்புதமாக வீசிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவும் தமிழகமும் பல ஆயிரம் மைல் தூரத்தில் இருப்பதாக நினைப்பவர்கள், ஞாயிறன்று கலி·போர்னியா தமிழ் கழகம் நடத்தும் தமிழ் பள்ளிக்கு வந்து பாருங்கள். ஆசிரிய, ஆசிரியைகள் நடத்தும் தமிழ்ப் பாடங்களும், சிறுவர்கள் தமிழ் கற்கும் விதமும் மற்றும் தமிழ் கற்றுவிட்டு வரும் தங்கள் சிறார்களுக்காக வெளியில் காத்திருக்கும் பெற்றோர்களின் தமிழ் அரட்டை அரங்கம் போன்றவற்றை பார்க்கும்போது, செலவு ஏதுமின்றி, நாள் கணக்கான விமானப் பயணம் ஏதுமின்றி வாரந்தோறும் தமிழ் மண்ணுக்குச் சென்று வந்த நிறைவு உண்டாகிறது.

சுமார் 200 மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் கலி·போர்னியா தமிழ் கழகம், வளைகுடா பகுதியில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாலான கிராமப் பள்ளிகளை விடப் பெரியது என்பது பெருமைக்குறிய விஷயம்.

சென்ற ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில் நம் தமிழ்க் குழந்தைகள் தமிழில் கலக்கியதை கண்டு மகிழ்ந்தோர் பலர். சென்ற ஆண்டு TVU விழாவில் தமிழ்ப் புலவர்களைப் பற்றி எவ்வளவு அருமையாகப் பேசி பாராட்டு பெற்றார்கள். அன்று நடந்த பட்டி மன்ற விவாதத்தைக் கேட்டபோது, இவர்கள் அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகளா என்று வியந்துவிட்டேன். அந்த நிகழ்ச்சியில் நமது பள்ளி மாணவர்கள் பல பரிசுகளைப் பெற்றனர். 

சென்ற ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில் நம் தமிழ்க் குழந்தைகள் தமிழில் கலக்கியதை கண்டு மகிழ்ந்தோர் பலர். சென்ற ஆண்டு TVU விழாவில் தமிழ்ப் புலவர்களைப் பற்றி எவ்வளவு அருமையாகப் பேசி பாராட்டு பெற்றார்கள். அன்று நடந்த பட்டி மன்ற விவாதத்தைக் கேட்டபோது, இவர்கள் அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகளா என்று வியந்துவிட்டேன். அந்த நிகழ்ச்சியில் நமது பள்ளி மாணவர்கள் பல பரிசுகளைப் பெற்றனர். 

இந்த வருடம் புதிதாக நான்கு குழுக்கள் துவங்கப்பட்டன. தமிழ் வகுப்பு முடித்துவிட்டு, தமிழிணையப் பல்கலை (TVU) வகுப்பு, இணையக் (Internet) குழு, புத்தகக்குழு, கவிதையும் செய்யுளும் குழு, பேச்சுத்திறன் வளர்க்கும் குழு, எழுத்துப் பயிற்சிக் குழு போன்றவற்றிலும் பங்கேற்று தங்கள் தமிழார்வத்தை வெளிப்படுத்துவதை எண்ணி பெருமை கொள்கிறேன். மாணவ மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் பயன்பெறும் வகையில் ஏறக்குறைய 200 தமிழ் புத்தகங்களும், பத்திரிகைகளும் கொண்டு தமிழ் நூலகம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் நாளன்று, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ் பள்ளியில் சேர்க்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தது அசெளகரியமான விஷயமாக இருந்தாலும், தங்கள் குழந்தைகள் கண்டிப்பாகத் தமிழ் கற்க வேண்டும், அதுவும் கலி·போர்னியா தமிழ் கழகத்தில் தான் தமிழ் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் மெத்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இங்குள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்க ·ப்ரீமான்ட் யூனியன் ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட் கலி·போர்னியா தமிழ் கழகத்துக்கு அனுமதி அளித்துள்ளது, கலி·போர்னியா தமிழ் கழகத்த்¢ன் வெற்றி பாதையில் அடுத்த மைல்கல்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக பாலர் பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் வெளிவரும் பள்ளிச் செய்தி பத்திரிகை மூலம் வகுப்பு மற்றும் பள்ளி நடவடிக்கைகள் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

கலி·போர்னியா தமிழ் கழகத்தில் தமிழ் கற்பதால் எனக்கு SunTV நிகழ்ச்சிகள் நன்றாக புரிகிறது என்கிறான் எங்கள் சிறுவன். கலி·போர்னியா தமிழ் கழகத்தில் எனக்குப் மிகவும் பிடித்த விஷயம் ஆண்டு வ்¢ழா நிகழ்ச்சியில் பங்கு கொள்வது என்கிறாள் எங்கள் சிறுமி.

கலி·போர்னியா தமிழ் கழகத்தில் நம் தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தருவதில் நிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகிறது. அதற்காக கலி·போர்னியா தமிழ் கழகத்துக்கு நன்றி.