"ITA Tamil Schools' Registration for School Year 2023-2024 will open on 19th Jul 2024."

புலம்பெயர்ந்து கலிஃபோர்னியாவில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் கற்றுத்தர ஆரம்பிக்கப்பட்ட, கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் இப்பொழுது உலகமுழுதும் பரவி, உலகத் தமிழ்க்கல்விக் கழகம் எனச் செயல்பட்டு வருகிறது.

ITA Logo

California Tamil Academy founded to teach Tamil language and Tamil culture to diaspora Tamil children in California is now spread all over the world as International Tamil Academy

New Progressive Tamil School in Cupertino

Cupertino Parents, do you want your kids to learn Tamil in a fun and practical way? We are excited to inform you that we opened a new branch in Cupertino. It is based on Progressive Tamil Education system, which ITA has successfully implemented in the Evergreen branch. We will start Kindergarten and hopefully Grade 1 classes this year.

For information about Progressive Tamil Education watch the video:

ITA Logo    ITA Logo

We encourage kids aged 5 to 7 and the first time Tamil learners to enroll in the new school. Select "ITA Cupertino Progressive Tamil School" from the schools list in the registration form.

For more information, please contact progressive.cupertino@catamilacademy.org.


இணையவகுப்பின் பயன்களும் சவால்களும்

“இடுக்கண் வருங்கால் நகுக” என்று ஐயன் வள்ளுவன் சொன்னதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மையெல்லாம், ஏன் இந்த உலகத்தையே, ஆட்டிப்படைத்த பெருந்தொற்று நமக்கெல்லாம் இணையக்கல்விப் பற்றி அனுபவப் பூர்வமாக அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தது. இணையக்கல்வியின் பலன்களையும் சவால்களையும் நேரடியாகப் பார்த்தோம்.

இணையவகுப்பின் பயன்கள்

வகுப்பறைகளுக்கு வாடகை கொடுக்கவேண்டாம், பள்ளிக்கு வந்து போகிற நேரம் சேமிப்பு, வீட்டிலிருந்தே கற்கலாம், தமிழ்ப்பள்ளிகள் இல்லாத இடத்திலிருக்கும் பிள்ளைகளுக்கும் தமிழ்க் கற்றுக்கொடுக்கலாம் போன்ற நல்ல விஷயங்களை இணையக் கல்வி மூலம் பார்த்தோம்.

இணையவகுப்பின் சவால்களும் குறைகளும்

இருந்தாலும் முக்கியமான சில சவால்களையும் இழப்புகளையும் நாம் சந்திக்க நேர்ந்தது. குறிப்பிட்ட சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால் …

  • ஆசிரியர் மாணவர் பிணைப்பு என்பது குறைவாகவும் சில விஷயங்களில் முற்றிலும் இல்லாமலும் இருந்தது.

  • சிறு வயது பிள்ளைகள் 90 நிமிடங்கள் சின்ன திரைக்கு முன் உடகார்ந்து கற்பது பெரிய சவாலாக இருந்தது.

  • மொழிக்கல்வி என்றால் மாணவர்கள் ஒரு இடத்தில் ஒன்றாக உட்கார்ந்து அவர்கள் கருத்துக்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

  • கற்றல் குறைந்துவிட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு பள்ளி மையம் பெருந்தொற்றுக்கு முன் இருந்ததை விட கடந்து இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கற்றல் வெகுவாக குறைந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

  • தமிழ்ப் பள்ளி என்பது வெறும் மொழியோடு நின்று விடாமல் மற்ற தமிழ் பேசும் குழந்தைகளோடு பேசுவதும், பண்டிகைகளை கொண்டாடுவதும், நம் கலாச்சாரம் சார்ந்த கலைகளை ஆண்டுவிழாவில் வெளிப்படுத்துவதையும் கொண்டதும் கூட. வெறும் நிகழ்நிலை வகுப்புகள் மட்டுமே எனில் இந்த மொழியின் மீது ஒரு பிடிப்பு வராது. இந்த நிகழ்நிலை வகுப்புகள் அடுத்த தலைமுறைக்குப் போகாது.

  • நிகழ்நிலை வகுப்புகள் ஒரு பாடத்தைக் கற்கவும், ஒரு வயதிற்கு மேல் கற்பவர்களுக்கும் அல்லது நேரமின்மை காரணமாக கற்கவும் சிறந்ததுதான். ஆனால் மொழியையும், மொழி சார்ந்த அந்த மக்கள் கலைகளையும் கலாச்சாரத்தையும் கற்க ஏற்றதல்ல.

மாணவர்கள் கற்கும் ஒவ்வொன்றும் அவர்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. நேர்முக வகுப்புகளைப் போன்ற தாக்கத்தை இணையவழி கல்வியும் கொடுக்க வேண்டுமெனில் கற்பிக்கப்படும் கல்வி நல்ல தரத்துடன் கற்கும் சூழலுக்கு ஏற்றார் போலவும் வடிவமைக்கப்பட வேண்டும்.

அதனால் இந்த ஆண்டு முதல் …

மேற்கண்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளையும் பழையபடி நேர்முக வகுப்பு ஆரம்பிக்கக் கேட்டுக்கொண்டுள்ளோம். அதற்கிணங்க அனைத்து பள்ளிகளும் நேர்முக வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

ஒரு சில பெற்றோர்கள் சில சவால்கள் காரணமாக இணைய வகுப்பு கேட்டுள்ளனர் என்பதை நாம் அறிவோம். தமிழ்க்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து சிரமம் பாராமல் தமிழ் நேர்முக வகுப்புக்கு பிள்ளைகளை அனுப்புமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இந்தப் பெருந்தொற்று காலத்தில் இருந்த அனைத்து சவால்களையும் சமாளித்து தடங்கல் இல்லாமல் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற உழைத்து எந்த சவால்கள் வந்தாலும் எங்கள் சேவையில் மனம் தளர மாட்டோம் என்று நிருபித்த அனைத்து தொண்டூழியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த பெற்றோர்களையும் மாணவர்களையும் வெகுவாக பாராட்டுகிறோம்.

நன்றி!